போராளி


வாழு - வாழவிடு
நான் உங்கள் நண்பன் சமுத்திரக்கனி. எனது முந்தைய படைப்பான “நாடோடிகள்” மூலம் காதலையும் நட்பையும் பற்றி உங்களிடம் விவாதித்தேன். இப்போது டிசம்பர் 1 வியாழனன்று உலகமெங்கும் வெளியாக இருக்கும் “போராளி” படத்தின் மூலம் உங்களை சந்திக்க வருகிறேன்.
அன்றாட வாழ்வில் ஆசைப்பட்ட வாழ்க்கையை வாழ்வதற்காக போராடும் ஒவ்வொருவருமே போராளி தான். “போராளி” யின் மூலம் தனி மனிதனின் வாழ்வியல் போராட்டத்தைப் பற்றி உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். இப்படித்தில் வரும் கதாபாத்திரத்தில் ஏதேனும் ஒன்றிலாவது உங்களையும் உங்கள் வாழ்வியலையும் பொருத்திப்பார்க்கும் அளவிற்க்கு எதார்த்தமாகவே “போராளி” எடுக்கப்பட்டுள்ளது.
“போராளி” படத்தின் கருத்துகளை உங்களிடம் இருந்து நேரடியாக எதிர்பார்க்கிறேன். மின் அஞ்சல், படத்தின் வலைத்தளம், ஃபேஸ் புக், ஆர்குட், டிவிட்டர் மூலம் நேரடியாக என்னை அணுகி உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளலாம்...
உங்கள் அனைவரையும் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்...
வாழ்வோம்! வெல்வோம்!

No comments: